Our Feeds


Tuesday, February 7, 2023

ShortNews Admin

மஹிந்தவின் மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் 90 பவுன் தங்க மாலை - JVP பகிரங்க சாடல்!



மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபி இனது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசார மேடையில் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது. இவைகள் யாருடைய பணம்? இவை அனைத்தும் திருடிய பணம் தானே.. கடந்த 9ம் திகதியன்று வீடுகள் எரிக்கப்பட்ட போது சிங்கராஜாவில் உள்ள ஹோட்டல் ஒன்றும் தீப்பிடித்திருந்தது. அதிலும் அந்த சொகுசு ஹோட்டலுக்கு உரிமையாளர் இல்லை. அதற்கு முன்னரும் உரிமையாளர் இருக்கவில்லை.. தீப்பிடித்தும் மாதக்கணக்கில் உரிமையாளர் இருக்கவில்லை. ஆனால் பாராளுமன்றில் நட்டஈட்டுப் பணம் ஒதுக்கப்பட்டதும் உரிமையாளர்கள் வெளியே வந்தார்கள். குறித்த ஹோட்டலுக்கு 100 கோடியாம். அதுவும் மக்கள் பணத்தில் ரொக்கட் அனுப்பிய மஹிந்தவின் இளைய மகன் தான்.

திருமணம் முடித்ததும் வீடு ஒன்றினை வாங்கினார் 36 கோடிக்கு, அதற்கு அப்பால் உள்ள இரு இடங்களை வாங்கினார் 9 கோடிகளுக்கு மொத்தம் 45 கோடிகளுக்கு சொத்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா டிவி அலைவரிசைகளில் ஏட்டிக்கு போட்டியாக ரொக்கட் சயன்ஸ் விஞ்ஞானம் குறித்து ரோஹிதவை நேர்கண்டவர். ரொக்கட் சயன்டிஸ்ட் என்று பீத்திக் கொள்ள என்ன இருக்கின்றது? கணக்கில் பெfயில். அதுவும் சாதாரண தர பரீட்சையில் கணிதத்தில் பெfயில். கணிதத்தில் பெfயில் என்டால் கலைப் பிரிவில் கூட உயர்தரம் தொடர முடியாது. அவ்வாறு இருக்க என்கிருந்து இந்த ரொக்கட் சயன்ஸ் அறிவு? 

அவர்களில் குற்றம் இல்லை. வாக்கினை நாம் தான் அவர்களுக்கு இடுகிறோம். அவ்வாறு இருக்க யாரும் வாக்கு எனக்கு வேண்டாம் என்று கூறுவதில்லையே. நாட்டு மக்கள் சிந்தியுங்கள். ஊழல்வாதிகளை தலை தூக்க விடாதீர்கள்..” எனத் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »