உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக நாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் தெரிவித்தார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கலந்துரையாடலில், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மற்றும் இன நெருக்கடி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரும் பங்கேற்றுள்ளார்.