Our Feeds


Tuesday, February 7, 2023

ShortNews Admin

86 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டியில் பேர்ல்ஸ் இல்லம் சம்பியனானது.



(எஸ்.அஷ்ரப்கான், எம்.என்.எம்.அப்றாஸ்)


கல்முனை, கமு/கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்    சுமார் 86 வருடங்களுக்கு பின்னர் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பேர்ல்ஸ்  இல்லம் (மஞ்சள் நிறம்) - 341 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது.

கல்முனை கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின்  இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வுகள் கல்முனை கடற்கரை வீதியில் உள்ள பலாஹ் மைதானத்தில் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா  தலைமையில் நேற்று பிற்பகல்  (06)    நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி பிரிவின் உதவிக் கல்வி பணிப்பாளர் யூ. எல். எம். சாஜீத், மற்றும் அதிதிகளாக கல்முனை மாநகர பிரதி முதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர் சுகாதார சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் ஐ.எல். எம்.இப்ராஹீம், பாடசாலைகளின்அதிபர்கள்,ஆகியோர் கலந்து கொண்டனர். 

இல்லங்களின் வெற்றி முறையே பேர்ல்ஸ் இல்லம் -341 புள்ளிகளைப் பெற்று ( மஞ்சள் நிறம்) முதலாமிடத்தையும்,எமிரெட் இல்லம்-326 (பச்சை நிறம்) புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும்,டைமன்ட் இல்லம்-322 (நீல நிறம்) புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும்   பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்,மைதான கண்காட்சி, வினோத உடை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் போட்டிகளின் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வெற்றிக் கிண்ணங்கள் என்பன கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இதன் போது பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள், கல்முனை வலயக் கல்வி அதிகாரிகள், கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான மத்திய குழு உறுப்பினர்கள், பழையமாணவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »