பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா சென்ற பஸ்ஸில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 54 பேர் பயணித்தனர்.
இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது பஸ் வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அவரது 3 வயது குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.