கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக SJB சார்பில் களமிறங்கியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடந்த மாதம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், வருகை நாட்கள், விவாதத்தில் கலந்து கொண்ட நாட்கள் உள்ளிட்ட அவர்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு தகவல் வெளியிடும் உத்தியோகபூர்வ தளமான manthri.lk முன்னாள் MP முஜிபுர் ரஹ்மானின் செயல்பாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 414 நாட்கள் நடைபெற்ற 8வது பாராளுமன்றத்தில் 398 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளில் முன்னாள் MP முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டுள்ளதுடன் 204 நாட்கள் நடைபெற்ற 9வது பாராளுமன்றில் 196 நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளில் முஜிபுர் ரஹ்மான் பங்கெடுத்துள்ளார்.
தான் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட நாட்களில் தனக்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக தனது உச்சபட்ட பங்களிப்பை பாராளுமன்றுக்கு அவர் வழங்கியுள்ளதை இது காட்டுகிறது. (SN)