Our Feeds


Tuesday, February 28, 2023

SHAHNI RAMEES

60 ஆண்டுகளில் முதல்முறையாக லோகோவை மாற்றியது (Nokia) நொக்கியா... !

 

பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் நிறுவனம் நொக்கியா (Nokia) கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக  தனது லோகோவை (Logo) மாற்றியுள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் இன்று திங்கட்கிழமை  மொபைல் உலக காங்கிரஸ் (Mobile World Congress) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வு மார்ச் 2ஆம் திகதி வரை நடைபெறும்.

இதை முன்னிட்டு நொக்கியா நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. நொக்கியா நிறுவனம் தனது பிராண்ட் அடையாளத்தை மாற்றுவதற்கு முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நொக்கியாவின் புதிய லோகோவை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி  பெக்கா லுண்ட்மார்க் (Pekka Lundmark) நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார்.



முன்பெல்லாம் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் தொழிலிலேயே நொக்கியா கொடி கட்டி பறந்தது. ஆனால், இப்போது தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் நொக்கியா தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

நெருக்கடியில் இருந்த நொக்கியா நிறுவனத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்கான அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியை பெக்கா லுண்ட்மார்க் 2020ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டார். நொக்கியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர Reset, Accelerate, Scale என்ற மூன்று அம்சங்கள் கொண்ட யுக்தியை பெக்கா உருவாக்கினார்.

அதில், முதல் கட்டமான Reset முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்டமான Accelerate ஆரம்பிக்கவுள்ளதாகவும் பெக்கா லுண்ட்மார்க் தெரிவித்துள்ளார். தற்போது நொக்கியா நிறுவனம் தனது சேவை தொழிலை விரிவாக்கம் செய்யவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது நோக்கியா நிறுவனம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தேவையான கருவிகளையும், உபகரணங்களையும் விற்பனை செய்து வருகிறது. இதற்காக 5ஜி மற்றும் நெட்வொர்க் சேவைகளுக்கு தேவையான உபகரணங்களை நொக்கியாவிடம் இருந்து பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கி வருகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »