சீனச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட சீனாவில் உள்ள சுரங்கம் நேற்று (22) இடிந்து விழுந்ததுடன், அங்கு 06 பேரை மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.