Our Feeds


Wednesday, February 22, 2023

ShortNews Admin

இஸ்ரேலின் முற்றுகையில் பலஸ்தீனியர்கள் பலி, 50 பேர் காயம்: பலஸ்தீன சுகாதார அமைச்சு அறிவிப்பு.



இஸ்ரேலியப் படையினர் இன்று நடத்திய  முற்றுகையின்போது பலஸ்தீனியர்க் அறுவர் கொல்லப்பட்டுள்ளனர். 


மேற்குக்கரையின் நப்லஸ் நகரில் இச்சம்பம் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடுகளால் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் 23 முதல் 72 வயதானவர்கள் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

தனது படையினர் நப்லஸ் நகரில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், மேலுதிக விபரங்களை வழங்க முடியாதுள்ளதாக ஏஎவ்பியிடம் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »