Our Feeds


Thursday, February 23, 2023

ShortNews Admin

ஆப்கானில் ஒரே நாளில் 5வது முறையாக நிலநடுக்கம் பதிவு - பயத்தில் பொதுமக்கள்!



ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 


மேலும் 4 நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது 12.15 மணியளவில் 5-வது முறையாக பைசாபாத்தில் இருந்து 287 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »