அடையாளம் காணப்படாத நான்காவது பறக்கும்
பொருளொன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.கனேடிய எல்லைக்கு அருகிலுள்ள, மிச்சிகன் மாநிலத்தின் ஹுரோன் எரிக்கு அருகில் இந்த பறக்கும் பொருள் ஞாயிற்றுக்கிழமை (12) சுட்டுவீழ்த்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்குச் சொந்தமான 200 அடி உயரமான பாரிய பலூன் ஒன்றை கடந்த 4 ஆம் திகதி சௌத் கரோலினா மாநிலத்துக்கு அருகில் அமெரிக்கப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
கடந்த 10 ஆம் திகதி, அலாஸ்கா மாநில வான்பரப்பில் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருளொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது.
அதற்கு அடுத்த நாள் 11 ஆம் திகதி, கனடாவின் யுகோன் பிராந்தியத்தில், அமெரிக்க எல்லையிலிருந்து 160 கிலோமீற்றர் தூரத்தில் பறந்த பறக்கும் பொருளொன்று அமெரிக்க போர் விமானத்தின் மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், 4 ஆவது பறக்கும் பொருள் மிச்சிகனில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.