Our Feeds


Saturday, February 11, 2023

ShortNews Admin

ரயில்வே இரும்புகளை திருடியாக 4 அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு - அமைச்சர் அதிரடி நடவடிக்கை!



ஹவ முதல் ஓமந்தை வரையான ரயில் பாதையை புனரமைக்கும் திட்டத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான இரும்புகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் நான்கு அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பந்தப்பட்ட நான்கு அதிகாரிகளும் திட்டத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்றும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் இரும்பின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »