துருக்கியில் நிலநடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கடந்த 4 நாட்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த கைது நடவடிக்கை தொடரும் என கூறப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கே 10 மாகாணங்களில், நிலநடுக்கம் எதிரொலியாக, 3 மாத கால அவசரகால நிலையை பிரதமர் எர்டோகன் பிறப்பித்து உள்ளார்.
இந்த நேரத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எர்டோகன் உறுதி கூறினார்.
திருட்டு அல்லது கடத்தலில் ஈடுபடும் மக்கள் அரசின் உறுதியான கரங்களில் இருந்து தப்ப முடியாது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.