இந்த வாரத்திற்குள் வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நாற்பது தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் சேர்ந்த வல்லுநர்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதால், வேலைநிறுத்தத்தின் ஊடாக மாத்திரமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியுமென தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தம் நடைபெறும் திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.
வரிக் கொள்கையை மாற்றப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, வரிக் கொள்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்து முரண்பாடான கருத்துக்களை உருவாக்கும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.