வீதி கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்