Our Feeds


Wednesday, February 22, 2023

Anonymous

அமெரிக்காவில் எங்கும் சரமாரியான துப்பாக்கிச் சூடு! 3 பேர் மரணம்!

 



அமெரிக்காவில் சிகாகோ நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒரு வயது பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் திருவிழா அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் பெண் பலியானார்.

அதேபோல் மிசிசிப்பி மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி, சுப்பர் மார்க்கெட் உட்பட 4 வெற்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

நியூஜெர்சி மாகாணத்தில் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

டென்னிசி மாகாணத்தில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை 18 வயது சிறுவன் சுட்டுக்கொன்றான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கத்தோலிக்க பிஷப் டேவிட் ஓ கெனோலின் வீட்டுக்கு புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »