Our Feeds


Wednesday, February 15, 2023

SHAHNI RAMEES

கொரிய மொழிப் பரீட்சையில் 3,950 பேர் தேர்ச்சி...!

 

2022 ஆம் ஆண்டிற்கான 6 ஆவது கொரிய மொழி பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் 3950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



கடந்த வருடம் ஜூலை மாதம் 04 ஆம் திகதி முதல் இந்த வருடம் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை மெய்நிகர் வழியில் இந்த பரீட்சைகள் நடத்தப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.



உற்பத்தித்துறை தொடர்பான குறித்த கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைக்கு 18, 269 பேர் தோற்றியிருந்தனர்.



இந்த பரீட்சை பெறுபேறுகளை slbfe.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.



பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சை மற்றும் மருத்துவ சோதனைக்கு வர வேண்டிய தினம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »