பண்டாரகம, களனிகம படகெட்டியில் உள்ள வீடொன்றில் கொள்ளையடித்த ஆறு பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த ஐவர் கைதுசெய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மின்சாதனங்கள் மற்றும் பொருட்களை சந்தேக நபர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைத்துவைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து திரும்பிய வீட்டின் உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்று 6ஆம் திகதி இரவு வீடு திரும்பிய சிறிது நேரத்திலேயே கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தம்பதியின் கைகளை கட்டி வைத்துவிட்டு இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.