2023 ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகைக்கான எந்தவொரு ஹஜ் முகவா்களையும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் இசட் ஏ.எம் பைசால் தெரிவித்தார்.
எனவே 2023 ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற விரும்புவா்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்தவொரு முகவர்களிடம் தங்களது கடவுச்சீட்டையோ முற்பணத்தையோ வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளா் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் திணைக்களத்தின் அறிவித்தலின்றி எவ்வித கொடுக்கல் வாங்களுக்கும் திணைக்களம் பொறுப்பேற்காது எனவும் பணிப்பாளா் மேலும் தெரிவித்தார்.
அஷ்ரப் ஏ சமத்