ஹங்வெல்ல பள்ளி வீதியில் முஸ்லிம் ஹோட்டல் உரிமையாளர் உட்பட 19 பேரை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பித்துச் செல்வதற்காக உதவிய கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகயின் வங்கி கணக்குக்கு 1.5 கோடி ரூபாய் பரிமாற்றப்பட்டமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஹங்வெல்ல முஸ்லிம் வர்த்தகரை சுட்டுக்கொன்ற வழக்கில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு அவிசாவளை நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்காக கடவுச் சீட்டு மற்றும் விசா என்பன வழங்கப்பட்டமை குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.