Our Feeds


Monday, February 20, 2023

Anonymous

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதி மாந்திரீகவாதி சனூன் பதுருக்கு 15 வருட கடூழிய சிறை - மந்திரிக்க வந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தமை நிரூபணம்.

 



திருமணத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டி, பூ​ஜைகளை மேற்கொள்ளவந்த  யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பூஜை செய்யும்   பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று (20) தீர்ப்பளித்தார்.


 10 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குற்றத்தை பிரதிவாதி செய்ததற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லையென்றாலும், சட்டப்பூர்வ மனைவியை வற்புறுத்துவது சட்டத்தின் முன் குற்றம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டுள்ளதால் மேற்படி தண்டனை வழங்கியுள்ளார்.


அவரை. கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீட்டுக்குள் பூஜைகளை செய்துவரும்,   சனூன் பதுர் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் யுவதி ஒருவரை அவரது அனுமதியின்றி வன்புணர்ச்சி செய்ததாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியிருந்தார்.  


இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், சம்பவத்துக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் பிரதிவாதி நடத்தும் பூஜைகளில் ஈடுபட சென்றுள்ளாள்.


பூஜைகள் நிறைவடையும் வரையிலும் எங்காவது சென்றுவாவென, அப்பெண்ணின் காதலனை குற்றவாளி வெளியில் அனுப்பி வைத்ததாகவும் தெரியவந்தது.  


வீட்டில் இருந்த பிரதிவாதியின் மனைவியை அழைத்து, பூஜைக்கு முட்டை தேவை என்று கூறியதையடுத்து, அவரும் பூஜை அறையின் கதவை பூட்டிவிட்டு, முட்டையை வாங்க  வெளியே அனுப்பி வைத்தது தெரியவந்தது.


அதன் பின்னரே, இளம் பெண்ணை அந்த பூசாரி பலாத்காரம் செய்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு நேரில் கண்ட சாட்சிகள் இல்லை என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் இல்லையென்றாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் டிஎன்ஏ மாதிரிகள், இளம் பெண்ணிடம் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.


  குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ரூபாய் 10,000 அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்தாவிடின் மேலதிக 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


நன்றி : தமிழ் மிரர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »