துருக்கியில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற சக்திவாய்ந்த பூகம்பத்தில் 14 இலங்கையர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பூகம்பத்தில் துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் 4,300 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15,000 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை வியத்தகு அளவில் உயரக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.