பானம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்மிவெவ காப்புக்காடு பகுதியில் 14 ஏக்கர் பரப்பளவில் நான்கு இடங்களில் கஞ்சா தோட்டம் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது.
7 முதல் 10 அடி உயரம் கொண்ட சுமார் 1,40,000 கஞ்சா செடிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக பானம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20 கஞ்சா செடிகள் மாதிரிகளாக எடுக்கப்பட்டு எஞ்சியவை தீயிட்டு அழிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படை அறுகம்பே முகாம் அதிகாரிகள் மற்றும் பானம பொலிஸ் நிலைய அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.