இரத்தினபுரி மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,336 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் டபிள்யூ.பி. சமன் திலக்க தெரிவித்தார்.
அவர்களில், பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான குடும்பங்களைச் சேர்ந்த 838 சிறுவர்கள் பதிவாகியுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்ட செயலகத்தினால் அந்த குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கான வளர்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாதாந்தம் 5,000 ரூபாய் பெறுமதியான உணவு வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வளர்ப்பு முறையின்படி, 279 சிறுவர்கள் வளர்ப்புப் பராமரிப்பைப் பெறவில்லை எனவும், அதற்கு நன்கொடையாளர்கள் பங்களிக்க முடியும் எனவும் இரத்தினபுரி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு 130 குழந்தைகளுக்கும், இரண்டு மாதங்களுக்கு 169 குழந்தைகளுக்கும், ஒரு மாதத்திற்கு 279 குழந்தைகளுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு வழங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
உடவலவ மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரிவுகளில் அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் பதிவாகியுள்ளனர்.
பாதுகாவலர்களைப் பெற்றுக் கொள்ளாத சிறுவர்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் அதற்கான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.