பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான் யார் மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றுள்ளது.
குறித்த வேன் அங்குள்ள ருகன்பூர் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய வேன் சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது.
அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த கார் வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதனையடுத்து ,பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பும் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயம் அடைந்த 20 பேர் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.