(எம்.வை.எம்.சியாம்)
புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கும்புக்கனாவுற ஓயாவில் தவறி விழுந்து நேற்று (பெப் 07) தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
புலஸ்திபுர, ஒனேகம பிரதேசத்தில் கும்புக்கனாறுவ ஓயாவில் தவறி விழுந்து 46 வயதுடைய நபரும் அவரது 12 வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரதேசவாசிகள், பொலிஸார், கடற்படையினரும் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி விழுந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 46 வயதுடைய நபர் ஒனேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.