ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி ரக்வானை பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதிகள், மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுட நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. (a)