Our Feeds


Saturday, February 25, 2023

ShortNews Admin

10 வயது மாணவனை காணவில்லை! - தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.



இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில்  பாடசாலை மாணவனான பத்து வயது சிறுவன் நேற்று (24) மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு காணாமற்போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் (வயது 10) என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதுளை ஹாலி எள்ள திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவனின் தாய் வெளிநாடு ஒனிறில் தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகுகின்றது.


தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். 


இந்த நிலையில் தனது ஒரே மகனை இராகலையில் சென் லெணாட்ஸ் தோட்டத்தில் உள்ள ஆட்சியின் அரவணைப்பில் விட்டுள்ளனர்.

 

மேலும் ஆச்சி இராகலை உயர் நிலை பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுவதால் காணாமற் போயுள்ள இந்த சிறுவனை தனது பாதுகாப்பில் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் கல்வி கற்க அனுமதி பெற்றுள்ளார்.


தற்போது இந்த சிறுவன் பாடசாலையில் பயின்று வரும் நிலையில் காணாமற் போன தினத்தன்று மாலை 05 மணிக்கு தான் வழமையாக செல்லும் பிரத்தியோக வகுப்புக்கு சென்றுள்ளார்.


இவ்வாறு வீட்டை விட்டு சென்ற சிறுவன் இரவுக்குள் வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் பாட்டி தேடுதலில் ஈடுப்பட்டதுடன் சிறுவன் காணாமற் போயுள்ளதாக இரவு 7.45 மணியளவில் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


அதேநேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற நீட்ட டெனிம் காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு 052 2265 222 மற்றும் 076 366 6106 என்ற தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை பொலிஸார் கேட்டுள்ளனர்.


ஆ.ரமேஸ்.


நன்றி : தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »