Our Feeds


Monday, February 13, 2023

ShortNews Admin

நிலக்கரி கப்பலுக்கான தாமதக் கட்டணம் 03 கோடியை தாண்டும் சாத்தியம்



இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள நிலக்கரி ஏற்றிச் செல்லும் 14வது கப்பலுக்கு 03 கோடி ரூபாவுக்கு மேல் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி கப்பல்களுக்கான பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இவ்வாறான காலதாமதமான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வரவுள்ள பல நிலக்கரி கப்பல்களுக்கு 30 வீத முன்பணம் செலுத்தப்படவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் பல நிலக்கரி கப்பல்கள் தாமதமாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »