Our Feeds


Monday, January 30, 2023

ShortNews Admin

WhatsApp வெளியிட்டுள்ள புதிய வசதிகள் மற்றும் அப்டேட்ஸ்கள் இதுதான்.



உலகின் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்று செயலியான வட்ஸ்அப், வீடியோ அழைப்புகளை இன்னும் வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.


புதிய “ஸ்விட்ச் கேமரா” பயன்முறையானது, வீடியோ அழைப்பின் போதே பயனர்கள் முன் மற்றும் பின் கெமராக்களுக்கு இடையே எளிதாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது.


இந்த அம்சம் இப்போது iOS மற்றும் Android ஆகிய 2 சாதனங்களுக்கும் கிடைக்கிறது.


வீடியோ அழைப்பின் போது கெமரா Iconஐ தட்டுவதன் மூலம் இதனை இலகுவாக பயன்படுத்தலாம்.


வீடியோ அழைப்பின் போது கெமராக்களுக்கு இடையில் மாறுவதற்கான வசதியை சில காலமாக பயனர்கள் கோரி வந்தனர்.


வட்ஸ்அப் அந்த கோரிக்கையை தற்போது அமுலாக்கியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »