உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதில் சந்தேகம் இருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தலைவராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான நந்தன முனசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் அந்த பதவிக்கு நிலந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட கத்தோலிக்க திருச்சபையின் அதிருப்தியையும் அருட்தந்தை தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கமும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதும் அதன் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை மறைப்பதும் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களையும் அவமதிக்கும் செயலாகும் எனவும் அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் மாளிகையில் இன்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.