வெல்லம்பிட்டிய, லாங்சியாவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்த பணிப்பெண், வீட்டின் உரிமையாளரான பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 61 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே சந்தேக நபர் அவரது எஜமானியை கத்தியால் குத்தியதாகவும், படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்திய சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.