Our Feeds


Sunday, January 29, 2023

ShortNews Admin

VIDEO: ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பிரதேசசபை உறுப்பினர் கைது



வர்த்தக நிலையமொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் ஹொரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் சந்தேக நபர் வந்த சிறிய லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மொரகஹஹேன-மில்லவ-தம்மாநந்த ப்ளேஸில் குறித்த ஆசிரியர் வர்த்தக நிலையமொன்றுக்கு சென்றுக்கொண்டிருந்த போது, ​​லொறியில் வந்த சந்தேகநபர், முன்னாள் ஆசிரியையின் பாதையை குறுக்கிட்டு அவரை கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பின்னர், சந்தேகமடைந்த அப்பெண் மிகுந்த முயற்சிக்கு பின் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில், சந்தேகநபர் அவரை பின்தொடர்ந்து வந்து அந்த வீட்டாரிடம் விசாரித்த போது, பின்னால் இருந்த கதவு ஊடாக அவர் தப்பி ஓடிவிட்டதாக வீட்டு உரிமையாளர் சந்தேக நபரிடம் கூறியுள்ளார்.


இதனையடுத்து, குறித்த ஆசிரியை 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மொரகஹஹேன பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஆசிரியைக்கு, முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் வழங்கியிருந்த பண கொடுக்கல் வாங்கல் முரண்பாடே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


சந்தேக நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் சுனில் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »