கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடும்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் பிளேஸ் வீதியூடாக வந்து காலி முகத்திடல் நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொம்பனிதெரு பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், காலி முகத்திடலுக்கு நுழையாமல் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு இந்த தடை உத்தரவு தடையாக இருக்காது என நீதிமன்றம் அந்த உத்தரவில் மேலும் தெரிவித்துள்ளது.