Our Feeds


Sunday, January 15, 2023

Anonymous

VIDEO: ஐ.எஸ். பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் பரப்ப முயற்சி - உடனடி விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை

 



(ஏ.ஆர்.ஏ.பரீல்)


இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை ஒன்று சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.


ஆங்கில மொழி இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையின் பிடிஎப் பிர­தி­யொன்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் குறிப்­பிட்ட ஆபத்­தான நிலைமை தொடர்பில் விரி­வாக விசா­ரணை நடாத்தி குறிப்­பிட்ட இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையை வெளி­யிட்­ட­வர்கள், மற்றும் விநி­யோ­கிப்­ப­வர்கள், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை இனங்­கண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் உலமா சபை பொலிஸ்மா அதி­ப­ரைக் ­கோ­ரி­யுள்­ளது.


அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­கார பிரிவின் இணைப்­பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் கொழும்பு குற்­ற­வியல் விசா­ர­ணைப்­பி­ரி­வுக்கும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.


இதே வேளை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்­ப­மிட்டு உல­மாக்­க­ளுக்கும் மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளுக்கும் மற்றும் சமூக தலை­வர்­க­ளுக்கும் வேண்­டு­கோ­ளொன்­றி­னையும் முன்­வைத்­துள்­ளனர்.


குறிப்­பிட்ட வேண்­டு­கோளில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; சமீப காலத்தில் ஆங்­கில மொழியில் இஸ்­லாத்­துக்கு முர­ணான தீவி­ர­வாத மற்றும் பயங்­க­ர­வாத சிந்­த­னை­களை வரவேற்கக் கூடி­ய­தா­கவும் அதனை மேற்­கொண்­ட­வர்­களை புக­ழக்­கூ­டிய விதத்­திலும் ஓர் சஞ்­சிகை (இலத்­தி­ர­னியல்) பரவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. சில தீய சக்­திகள் இத­னைப்­ப­ரப்பி இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும், முஸ்­லிம்­களும், இஸ்­லாமும் இலங்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் என சித்­த­ரிக்­கவும் முயற்­சிக்­கி­றார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.


இவ்­வா­றான கால­கட்­டத்தில் எமது சமூ­கத்தையும் நாட்­டையும் பாது­காப்­பது எமது கட­மை­யாகும்.அதனால் இந்த நாட்டில் எமது முன்­னோர்கள் முஸ்ஸிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேற்­கொண்ட பங்­க­ளிப்­புகள் போன்று இன்றும் நாம் பங்­க­ளிப்­பு­களை மேற்­கொள்ள வேண்டும்.


இஸ்­லாத்­துக்கு முர­ணான இஸ்­லாத்தின் பெயரில் பகி­ரப்­படும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அனை­வரும் மிக ஜாக்­கி­ர­தை­யா­கவும், ஒற்­று­மை­யா­கவும் செயற்­பட்டு நாட்­டுக்கும் மனித சமு­தா­யத்­துக்கும், இஸ்­லாத்­துக்கும் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப உதவி புரி­யு­மாறு அன்­புடன் வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரா­மித்­திடம் விடி­வெள்ளி வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். ‘2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம் பெறு­வ­தற்கு முன்பு அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் உலமா சபை உளவுத்துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவித்தது. ஆனால் பாதுகாப்பு பிரிவினரால் இத்தாக்குதலை நிறுத்த முடியாதுபோனது.


இம்முறையும் ஐ.எஸ். தீவிரவாதம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். இதன் பின்னணியில் உள்ளவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்றார்.


Vidivelli


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »