ஜனனம் அறக்கடளை அமைப்பும் மற்றும் ஐ.டி.எம் நேசன்ஸ் கேம்பஸ் சர்வதேச நிறுவனமும் இலங்கைக்கான டெக்பந்து சம்மேளனத்துடன் இணைந்து பாடசாலை மட்டங்களில் டெக்பந்து விளையாட்டினை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் கொழும்பு விவேகனந்தா கல்லூரியிலும் கடந்த 12.01.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுத்துறைகளில் ஆர்வத்தை அதிகரிப்பதனூடாக மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேன்படுத்தும் நோக்குடன் டெக்பந்து விளையாட்டினை பாடசாலை மட்டங்களில் ஜனனம் அறக்கட்டளை அறிமுகப்படுத்துகின்றது.
அந்த அடிப்படையில் கொழும்பில் உள்ள பாடசாலைகளில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 12 பாடசாலைகளுக்கு ஜனனம் அறக்கட்டளையானது டெக்பந்து விளையாட்டுக்கு தேவையான பிரத்தியேக மேசை மற்று பந்து உட்பட உபகரணங்களை வழங்கிவருகின்றது.
கொழும்பு விவேகானந்தா கல்லூரிக்கு இவ்விளையாட்டின் அறிமுக விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகைதந்த
IDM நேஷன்ஸ் கெம்பஸ் சர்வதேச நிறுவனத்தின் தலைவரும் ஜனனம் அறக்கட்டளையின் தவிசாளருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களால் இவ்விளையாட்டு உபகரணங்கள் இலவசமாக பாடசாலைக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை இந்த வாரத்தின் முதற்பகுதியில் கொழும்பு சைவ மங்கையர் கழகத்திற்கும் இவ்விளையாட்டுக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வு இக்கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பதில் அதிபரான செல்வி.தெ.தேவசியானி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை டெக்பந்து சம்மேளனத்தின் தலைவர் திரு.காமினி ஜயசிங்க உட்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இடப்பற்றாக்குறை நிலவும் கொழும்பு விவேகனந்தா கல்லூரியில் டெக்பந்து விளையாட்டு பொருத்தமானது என்றும் இந்த விளையாட்டில் ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ள முடியும் என்பதால் கலவன் பாடலைகளுக்கும் இது பொருத்தமான விளையாட்டு என ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் இடப்பற்றாக்குறைக்கு நீண்டகாலத்தீர்வாக கல்லூரியை அண்மித்து காணப்படும் விவேகானந்தா சபைக்கு சொந்தமான காணியினை பாடசாலைக்கு வழங்கி அதில் புதிய வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்படுவதற்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என உரிய விவேகானந்த சபையிடம் கோரிக்கை முன் வைப்பதாக கலாநிதி. ஜனகன் அவர்கள் குறிப்பிட்டார்.