ஹிருனிகா தலைமையில் காலி முகத்திடலில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்நேரத்தில் 200 மில்லியன் செலவு செய்து சுதந்திர தின கொண்டாட்டங்களை நடத்த வேண்டுமா? எனக் கேள்வியெழுப்பியவாறு சுதந்திர தின ஏற்பாடுகள் நடைபெறும் காலி முகத்திடலில் இன்று காலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணியினர் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை நடத்தினார்கள்.