மத்துகம-யட்டதொலவத்த பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வந்த நபரொருவர், அங்கிருந்த பிஸ்கட், பால்மா போன்ற பொருட்களை திருடி தனது உடமையில் மறைத்து வைத்திருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் 4 மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட நபர் நான்கு முறை வந்து பொருட்களை திருடியுள்ளதோடு, இரண்டு முறை சிறு குழந்தையுடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.