கொழும்பு 7 ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த காதலனான பல்கலைக்கழக மாணவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி அவரது காதலனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக கருவாதோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகளை கருவாதோட்டம் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.