Our Feeds


Sunday, January 22, 2023

SHAHNI RAMEES

UPDATE #VIDEO: : நானுஓயா விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நல்லடக்கம்..!



நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா

ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் - வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாசாக்கள் நேற்று (21.01.2023) நள்ளிரவு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டன.




அதன்படி, வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோரின் ஜனாசாக்கள் நள்ளிரவு 12:10 மணியளவில் ஹட்டன் - டிக்கோயா ஜும்மா பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.











பள்ளிவாசலில் ஜனாசாக்கள் வைக்கப்பட்ட பின்னர், இஸ்லாமிய சம்பிரதாயப்படி முதலில் குடும்பத்தினர், பிறகு பெண்கள், பிறகு ஆண்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதன்போது, ஐந்து சடலங்களிலும், முகங்கள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.




மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இறுதி அஞ்சலி செலுத்த அனுமதித்த பின்னர், அதிகாலை 3 மணியளவில் இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ஏனைய சடங்குகளின் பின்னர் சடலங்கள் ஹட்டன் டிக்கோயா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.







(எஸ்.கணேசன்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »