Our Feeds


Monday, January 9, 2023

ShortNews Admin

மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரி STF அதிகாரிகளினால் அதிரடி கைது.



மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 350 கஞ்சா செட்கள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »