கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப்பித்திகொல்லாவ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற கடமை தொடர்பான கலந்துரையாடலின்போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பதில் பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சிகிச்சைக்காக கெப்பித்திகொல்லாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய ஆலோசனையின்பேரில் மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் மூலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.