Our Feeds


Thursday, January 12, 2023

Anonymous

நுவரெலியாவிலும் SLPP தனித்துப் போட்டி - கட்டுப்பணமும் செலுத்தியது!

 



உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி ரத்னாயக்க உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினர்.


எஸ்.கணேசன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »