மினுவாங்கொடை பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த பெண் சிறிலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.