அக்குரணை பிரதேச சபையை இலக்கு வைத்து அக்குரணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தலைமையிலான சுயாதீனக் குழு இம்முறையும் “சுயேற்சையாக” தனித்து களமிறங்குகிறது.
உள்ளுராட்சித் சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சுயேற்சைக் குழுவாக இன்றைய தினம் இஸ்திஹார் தலைமையிலான குழு செலுத்தியது.
பொதுமக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் தனித்து களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இம்முறையும் சுயேற்சையாக களமிறங்குவதுடன், மீண்டும் அக்குரணை மக்களின் பலத்த வரவேற்புடன் பிரதேச சபையின் ஆட்சியை சுயேற்சைக் குழு கைப்பற்றும் என்று கட்டுப்பணத்தை செலுத்திய பின் குழுவின் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபை தலைவருமான இஸ்திஹார் இமாதுத்தீன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.