எரிபொருள் QR கோட்டா முறையை புறக்கணித்து எரிபொருள் விநியோகம் செய்கின்ற எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோகம் செய்யும் போது தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை பின்பற்றுவதில்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் பெற்றோலிய களஞ்சியசாலைகள் முனையம் என்பவற்றின் அதிகாரிகளுடன் எரிசக்தி அமைச்சு நேற்று (16) நடத்திய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.
கோட்டா முறையைப் பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின் பதிவினை இடைநிறுத்த இதன்போது முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.