ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அலுவலகம் மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அலுவலகங்களின் திறப்பு விழா இன்று (08) இடம் பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ புத்திக பத்திரண மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் ஐக்கிய மகளிர் சக்தியின் பிரதித் தலைவருமான திருமதி உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான பூர்வாங்க விடயங்கள், கட்சியின் மாவட்ட மட்ட கட்டமைப் பலப்படுத்தல், பிராந்திய மக்கள் தொடர்பாடல் விடயங்களை வினைத்திறனாக செயற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.