Our Feeds


Sunday, January 8, 2023

ShortNews Admin

PHOTOS: தமிழ் MP க்களின் கவனத்திற்கு | இதற்கு முடிவே இல்லையா? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்.



மாத்தளை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.


இன்று காலை பத்து மணி முதல் மாத்தளை நகரப்பகுதியில் தமது உறவுகளுக்கு நீதி கோரி துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட உறவுகள் பகல் 01 மணியளவில் மாத்தளை நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் 1989 முதல் 1991 வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1042 என அறிக்கையிடப்பட்டது எனவும் இதில் விசாரணைக்குட்ப்படுத்தப்பட்டது 136 கோட்டபாயவின் இராணுவ கட்டுப்பாட்டில் 700 சித்திரவதை முகாம்கள் 20 வெகுஜன புதைகுழி எலும்புக்கூடுகள் 154 இவைகளின்  வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்றும் உண்மை நீதி எங்கே ? என கோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »