பாலமுனை, ஸஹ்வா அரபுக் கல்லூரியின், 3வது பட்டமளிப்பு விழா மற்றும் கௌரவிப்பு விழாவுடன் 30 வருட நிறைவையொட்டிய முத்து விழா ஆகிய முப்பெரு விழா இன்று (14) நடைபெற்றது.
கல்வித் துறையில் கலாநிதிகளையும், முதுமாணிகளையும், பல கலைமாணிகளையும் உருவாக்கியுள்ள இக்கல்லூரி, இலங்கையினதும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினதும் சமய, சமூக முன்னேற்றத்திற்காக பல துறைகளிலும் பணியாற்றும் பல பெறுமதியானவர்களை உருவாக்கி ஓங்கி வளர்ந்து நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.