சஜித் பிரேமதாசா ட்ரோபி 2023 கிரிக்கெட் இறுதி சுற்று போட்டி நேற்றைய தினம் கொழும்பு ஹை பாக் மைதானத்தில் சகோதரர் அனுசனின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற அணிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் டி எஸ் சேனநாயக்க அரசியல் கற்கை நிலையத்தின் பிரதி தலைவருமான கலாநிதி. வி.ஜனகன் அவர்கள் வெற்றி கேடயங்களை வழங்கி வைத்தார்.
இப்போட்டி நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.