ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷவின் எம்.பி பதவியை வலுவிலக்கச் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டி. என். சமரக்கோன் மற்றும் பி. சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களினால் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.